Monday, October 13, 2008

scissor cigarat, குளத்து மீன் குழம்பு..

எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் முக்கியமான ஒன்று புகை பிடிப்பது. "Its beautifying the manliness" என்பது அடியேனின் தனிப்பட்ட கருத்து.



இதை சமீப காலமாக நான் அனுபவிப்பதில்லை. அதாவது புகை பிடிப்பதை நிறுத்தி வைத்துள்ளேன். காரணம், அன்புமணி ராமதாசின் புதிய சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து என்றெல்லாம் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்.



சிகரட் என்ற தீய பழக்கத்தை விட காதல் என்ற மிகவும் கொடூரமான பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். இந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர ஏதேனும் சட்டம் வரும்மா என்று யோசித்து கொண்டு இருந்த நேரத்தில் பன்னீர் மாமா என் நினைவுக்கு வந்தார்.



எனக்கு சிகரட்டின் அறிமுகம் பன்னீர் மாமா மூலமாக கெடச்சதா ஞாபகம். அப்பாவும் மாமாவும் மாநில அரசு சேவைக்கு ஓரிரு மாத இடைவெளியில் சேர்ந்தார்கள். அப்பாவுக்கு அம்மாவை பெண் பார்க்கும் செல்லும் பொழுது மாப்பிள்ளை தோழர்களில் ஒருவராக சென்றவர். அம்மாவின் கைபக்குவத்தில் மீன் குழம்பு சாப்பிட்டு பழகியவர் ஆதலால், அவர் வரும் தருணங்களில் எல்லாம் அதை எதிர்பார்த்தே வருவது அவரது வழக்கம்.



"என்னடா உங்க அம்மா மீன் குழம்பு சமைசிடுச்சா" ன்னு கேட்டுகிட்டே வருவாரு. ஆத்துல குளத்துல பிடிக்கிற மீன் கவுச்சி ரொம்போ தூக்கலா இருக்குறதால அம்மாவுக்கு சமைக்க பிடிக்காது.அப்பாவின் கட்டாயத்திற்காக அம்மா மீன் குழம்பு வைக்கும்.



அவர் குரல கேட்டவுடனே "எத்தனதடவ சொன்னாலும் உங்களுக்கு புரியாதா.. அடுத்ததடவ எல்லாம் இந்த மாதிரி ஆத்து மீனையும் குளத்து மீனையும் புடிச்சிட்டு வந்து சமைக்க சொனீங்க நடக்குறதே வேற" அப்படின்னு கழுவுற இடத்துலேந்து திட்டும்.

அவரு அதெல்லாம் காதுலையே போட்டுக்க மாட்டாரு. தீப்பெட்டி எடுத்துட்டு வரச்சொல்லி ஒரு scissor cigarat எடுத்து பத்தவைபாறு. மேஜயில தினமணி கிடக்கும்.எடுத்து படிசிகிட்டே பொகைய ஊதுஊதுந்னு ஊதி தள்ளுவாரு.



அப்பாவுக்கும் மாமாவுக்கும் சில அலுவலக விவாதங்கள் நடக்கும். அரசு உஉழியர் சங்க விவாதங்கள் நடக்கும். pugaya oodhithalikitte வாயின் உள்பக்கமா குருவி கத்துற மாதிரி சத்தம் குடுப்பாரு.



அதுக்குள்ள குழம்பு கொதிக்கிற வாசம் வந்துடும். அம்மாகிட்ட பேச்சு வாங்குறதுல அவருக்கு எப்படி இருக்குமோ தெரியாது. வாசனைய புடிச்சதும் "இம் இம் ஆகட்டும் .. ஒரு மீன் குழம்பு க்கு இவ்வளவு நேரமா " ன்னு சத்தம் குடுப்பாரு.



அம்மா திட்டிகிட்டே தட்டு குழம்பு சட்டி, சோத்து பான ,தண்ணி எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்கும். குழம்பு மீன் முள்ள விரல்ல vachi எடுக்காம அப்படிய்யே வாயில திணிச்சி உறிஞ்சீ சாப்டுவாறு .



முள்ளு தனியா சதா தனியா அவரு வாயிலேயே பிரிச்சி சாப்டறத பாக்கும் போது ஆசையா இருக்கும். பொறந்தது லேந்து கவுசியே சாப்டாத அப்பா கூட " யோவ் , நீ திங்ரபாத்தா எனக்கே ஆச வந்துடும் போல " ன்னு சொல்லுவாரு.



அப்பா துறையூர் மாவட்டத்துல பொறந்து வளந்தவரு. கூட பொறந்த ஒன்பது பேர்ல அப்பா தான் கடகுட்டி. ஆளுங்க ஜாஸ்தியா இருக்குறதால எங்க அப்பாயிக்கு, மீனெலாம் கவுசீ போக கழுவ தெரியாதாம். ஏதோ ரெண்டு கழுவு கழுவீ உப்பு மிளகாய் அரச்சி மீனையும் ஒண்ணா சேர்த்து குழம்ப கொதிக்க விடுமாம்.



அதுவும் அப்பாயீ சிலோன் ல பொறந்து வளந்தது. ரொம்போ சொகுசா வாழ்ந்தது. அத ரெண்டாந்தாரமா எங்க தாத்தா கட்டிக்கிட்டு வந்துட்டாரு. சமயலெலாம் அதுக்கு அவலவா வராதாம்.அதுனாலயே அப்பாவுக்கு கவுச்சி மேல ஒரு வெறுப்பு.



அப்பா குடும்பத்த எப்பொழுதும் கேலி பேசுற எங்க அம்மா இத வேற மாதிரி சொல்லுவாங்க. அவுங்க ஊர்லேல்லாம் இருக்குற மாதிரி தண்ணி வசதி இல்லாத தால எங்க அப்பாயீ ஊர்ல யாரும் மீன நிறையே தண்ணி ஊத்தி கழுவ மாடாங்கல்லாம். அதுனாலயே எங்க அப்பாவுக்கு கவுச்சி பிடிக்காம போச்சாம்.



எங்க அம்மா பொறந்து வளந்ததெல்லாம் கீழ தஞ்சை மாவட்டம். திருவாரூர் பக்கதுல ஆத்தோரமா உள்ள ஒரு கிராமம். அத பொறுத்த வரைக்கும் தண்ணி உள்ள ஊர் தான் நல்ல ஊர். அந்த மாதிரி ஊர்ல உள்வங்கேல்லாம் தான் உலகத்துலேயே சுத்தமானவங்கலாம்.